விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். இவர்களுடன் முக்கிய ரோல்களில் அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ஷாந்தனு, தீனா, நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம் குமார், கௌரி கிஷன், மகேந்திரன், ரம்யா, ஸ்ரீமன், ரமேஷ் திலக், சேத்தன் நடித்துள்ளனர்.

விஜய்யின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்த இப்படம் இன்று (ஜனவரி 13-ஆம் தேதி) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரிலீஸாகியுள்ளது. இப்போது இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.