தனுஷ் – பாலாஜி மோகன் காம்போவில் உருவாகும் படம்… விஜய் சேதுபதியின் ரீல் மகள் தான் ஹீரோயின்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘அட்ராங்கி ரே’ படத்தை ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி திரையரங்குகளிலும், ‘ஜகமே தந்திரம்’ படத்தை ஜூன் மாதம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். சமீபத்தில், நடிகர் தனுஷ் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தமிழ் படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக சொல்லப்பட்டது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலாஜி மோகன் இயக்க உள்ளாராம். ஏற்கனவே, இவர்கள் காம்போவில் ‘மாரி’ 1 & 2 என இரண்டு மாஸ் படங்கள் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இதே கூட்டணி கைகோர்த்திருப்பதால் தனுஷின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆனார்கள்.

‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். தற்போது, இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க க்ரித்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் சமீபத்தில் தெலுங்கில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘உப்பெனா’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். இப்படத்தில் க்ரித்தி ஷெட்டிக்கு அப்பாவாக வில்லன் ரோலில் விஜய் சேதுபதி மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.