நடிகர் உதயநிதிக்கு இவ்ளோ பெரிய பையனா?… தீயாய் பரவும் ஸ்டில்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘ஏஞ்சல், கண்ணை நம்பாதே’, ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் ‘ஆர்டிகிள் 15’ படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இதனை இயக்கி வருகிறார். ஹிந்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு அதிக எக்ஸ்பெக்டேஷன் உள்ளது.

2002-ஆம் ஆண்டு கிருத்திகாவை திருமணம் செய்து கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது, மகன் இன்பநிதியுடன் உதயநிதி ஸ்டாலின் எடுத்துக் கொண்ட ஒரு புதிய ஸ்டில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.