‘மஃப்டி’ ரீமேக்கில் சிலம்பரசன்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ‘பத்து தல’ ஃபர்ஸ்ட் லுக்!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கன்னட திரையுலகில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மஃப்டி’. இந்த படத்தை இயக்குநர் நாரதன் இயக்கியிருந்தார். இதில் ஷிவராஜ்குமார், ஸ்ரீமுரளி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா, சாயா சிங், தேவராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் மெகா ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கைப்பற்றினார். இதில் ஹீரோவாக சிலம்பரசன் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், டிஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் நடிக்கிறார்களாம்.

‘சில்லுனு ஒரு காதல்’ படம் மூலம் ஃபேமஸான கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறாராம். சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் ‘பத்து தல’ என்று வெங்கட் பிரபு, ஆனந்த் ஷங்கர், விக்னேஷ் சிவன், விஜய் மில்டன், கார்த்திக் சுப்பராஜ், பா.இரஞ்சித், சாம் ஆண்டன், சந்தோஷ்.பி.ஜெயக்குமார், எம்.ராஜேஷ், அஸ்வத் மாரிமுத்து ஆகிய 10 இயக்குநர்கள் ட்விட்டரில் அறிவித்தனர். இதன் ஷூட்டிங்கை வருகிற பிப்ரவரியில் ஆரம்பிக்க பிளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார்.

Share.