‘பாரிஸ் ஜெயராஜ்’-ஆக சந்தானம்… ரிலீஸானது படத்தின் அசத்தலான ட்ரெய்லர்!

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். சந்தானத்தின் புதிய படமான ‘பிஸ்கோத்’ சமீபத்தில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது.

காமெடி வசனங்களில் சந்தானம் கலக்கியிருந்த இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சந்தானம் நடித்துள்ள புதிய படம் ‘பாரிஸ் ஜெயராஜ்’. இந்த படத்தை இயக்குநர் ஜான்சன் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக அனைகா சொட்டி நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோலில் சஸ்டிகா ராஜேந்திரன் நடித்துள்ளாராம். இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், சந்தானம் செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் இதன் ஃபர்ஸ்ட் லுக் – செகண்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று படத்தின் அசத்தலான ட்ரெய்லரை சந்தானம் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார்.

1

2

Share.