இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சமீரா ரெட்டியின் அரிய புகைப்பட தொகுப்பு!

திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த சமீரா ரெட்டி அதிகமாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தார். தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “வாரணம் ஆயிரம்” படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் சமீரா ரெட்டி.

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்தார். வாரணம் ஆயிரம் படத்தில் வரும் “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” பாடலில் இவரை ரசிக்காத ஆளே கிடையாது.

அவ்வளவு அழகான சமீர ரெடி தமிழில் நடிகர் அஜித்துடன் “அசல்” எனும் படத்தில் நடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான “வேட்டை” படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக கடைசியாக நடித்தார் சமீரா ரெட்டி.

இவர் அக்ஷய் வர்தே என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அன்றிலிருந்து தன் குடும்பத்தில் கவனம் செலுத்திவரும் இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

தனது குடும்பத்துடன் லாக்டவுன் நேரத்தை செலவிட்டு வரும் சமீரா ரெட்டி, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களையும் தன் குழந்தைகளுடன் இருக்கும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

டிசம்பர் 14 ஆம் தேதி தனது பிறந்தநாளை குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார் சமீராரெட்டி. இதுவரை யாரும் பார்த்திராத இவரின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ!

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

Share.