தவறான ஃபேஷியல் செய்த டாக்டரிடம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய ரைசா!

‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை ரைசா வில்சன். அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல், வர்மா’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ரைசா வில்சன் நடிப்பில் ‘#லவ், FIR, காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், தி சேஸ்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் கார்த்திக் ராஜு இயக்கும் ‘தி சேஸ்’ (The Chase) படத்தின் ஷூட்டிங் ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், மோனிகா ஆகியோர் நடித்துள்ளனர். எமோஷனல் த்ரில்லர் ஜானர் படமான இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். ‘#லவ்’ படத்தை பாஸ்கோ இயக்க, ‘மீண்டும் ஒரு காதல் கதை’ மூலம் ஃபேமஸான வால்டர் பிலிப்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். ‘FIR’ படத்தை மனு ஆனந்த் இயக்க, ஹீரோவாக விஷ்ணு விஷாலும், முக்கிய ரோல்களில் கெளதம் மேனன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜானும் நடிக்கின்றனர்.

‘காதலிக்க யாருமில்லை’ படத்தை கமல் பிரகாஷ் இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கிறார். ‘ஆலிஸ்’ படத்தை மணி சந்துரு இயக்க, முக்கிய ரோலில் லைலா நடிக்கிறார். சமீபத்தில், ரைசா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நேற்று டாக்டர் பைரவி செந்திலிடம் சென்று என் முகத்தில் ஃபேஷியல் செய்து கொண்டேன். அப்போது அவர் இதுவரை செய்யாத ஒரு முறையில் ஃபேஷியல் செய்து கொள்ளும் படி என்னை கட்டாயப்படுத்தினார்.

அதன் விளைவு என்னுடைய முகத்தை இப்படி ஆக்கி விட்டது. அதன் பிறகு டாக்டர் பைரவி என்னை சந்தித்து பேச மறுக்கிறார். அவருடன் பணிபுரிபவர்கள், அவர் ஊரிலேயே இல்லை வெளியூர் சென்று விட்டார்” என்று சொல்கிறார்கள் என்று குறிப்பிட்டு, ஒரு ஸ்டில்லையும் வெளியிட்டுள்ளார். அந்த ஸ்டில்லில் ரைசாவின் கண்ணுக்கு கீழ் வீங்கியிருந்தது. தற்போது, இதற்காக டாக்டர் பைரவி செந்திலிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.