பிரபாஸின் பர்த்டே ட்ரீட்… வெளியானது ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர்!

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான பிரபாஸிற்கு இன்று (அக்டோபர் 23-ஆம் தேதி) பிறந்த நாளாம். 2002-ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் வெளியான படம் ‘ஈஸ்வர்’. இது தான் பிரபாஸ் ஹீரோவாக அறிமுகமான முதல் படமாம். இந்த படத்தை இயக்குநர் ஜெயந்த்.சி.பரஞ்சீ இயக்கியிருந்தார். இதன் பிறகு ‘ராகவேந்திரா, வர்ஷம்’ என இரண்டு படங்கள் வெளியானது.

இதில் ‘வர்ஷம்’ மிகப் பெரிய ஹிட்டானதால் பிரபாஸிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அடவி ராமுடு, சக்ரம், சத்ரபதி, பௌர்ணமி, யோகி, முன்னா, புஜ்ஜிகாடு, பில்லா, ஏக் நிரஞ்சன், டார்லிங், மிஸ்டர் பெர்ஃபெக்ட், ரிபெல், மிர்ச்சி, பாகுபலி 1 & 2, சாஹோ’ என படங்கள் குவிந்தது.

இதில் ‘பாகுபலி 1 & 2’ வெளியான அனைத்து மொழிகளிலும் ஹிட்டாகி பிரபாஸின் கேரியரில் மிகப் பெரிய ஹைலைட்டாக அமைந்த படங்கள். இப்போது பிரபாஸ் நடிப்பில் ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இன்று பிரபாஸின் பர்த்டே ட்ரீட்டாக படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.

Share.