கமல் – லோகேஷ் காம்போவில் ‘விக்ரம்’… பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மலையாள நடிகர்!

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகப்போகிறது. அதற்கான வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட ‘விக்ரம்’ டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசிலும் நடிக்க உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை நடிகர் ஃபஹத் ஃபாசிலே இன்று (ஏப்ரல் 7-ஆம் தேதி) கொடுத்திருக்கும் ஒரு பேட்டியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இப்படத்தில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனுக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோல் தான் ஃபஹத் ஃபாசிலுக்கு என்று சொல்லப்படுகிறது.

Share.