பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டப்போகும் 6 பிரபல நடிகைகள்!

பொதுவாகவே ஹீரோவுக்கு நிகராக அப்படத்தின் வில்லன் ரோலும் பெரிதும் பேசப்படும். அந்த அளவுக்கு அக்கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை எழுதியிருப்பார்கள் இயக்குநர்கள். இந்த வில்லன் ரோலில் சில ஹீரோக்களே துணிந்து அவ்வப்போது நடித்து வருகிறார்கள். ஹீரோக்களை போல சில ஹீரோயின்களும் வில்லி ரோலில் நடித்து மாஸ் காட்டி வருகிறார்கள். இப்போது படங்கள் மற்றும் சீரிஸ்களில் பவர்ஃபுல்லான வில்லி ரோலில் நடித்து வரும் ஹீரோயின்களின் லிஸ்ட் இதோ…

1.சமந்தா – தி பேமிலி மேன் 2 :

மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் சீசன் 2-வில் நடிகை சமந்தா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டப்போகிறாராம். இதனை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கி உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் இவ்வெப் சீரிஸுக்கென ஸ்பெஷல் ட்விட்டர் எமோஜி வெளியிடப்பட்டது. இந்த எமோஜியை #TheFamilyMan, #TheFamilyMan2, #TheFamilyManOnPrime போன்ற ஹேஸ்டேக்குகளில் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளதாம். சமீபத்தில், ரிலீஸ் செய்த இதன் டீசர் இவ்வெப் சீரிஸ் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இந்த சீரிஸை ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘அமேசான் ப்ரைம்’யில் சம்மருக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

2.ரெஜினா கசாண்ட்ரா – சக்ரா :

விஷால் ஹீரோவாக நடித்துள்ள ‘சக்ரா’ திரைப்படத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டப்போகிறாராம். இப்படத்தை MS.ஆனந்தன் இயக்க, டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஷ்ரதா ஸ்ரீநாத், ரோபோ ஷங்கர், மனோபாலா, கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளார்கள். சமீபத்தில், இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ள்ளனர்.

3.மம்தா மோகன்தாஸ் – எனிமி :

விஷால் ஹீரோவாக நடிக்கும் ‘எனிமி’ திரைப்படத்தில் ஆர்யா பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஆர்யா நடிக்கிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக வில்லி ரோலில் நடிகை மம்தா மோகன்தாஸ் மிரட்டப்போகிறாராம். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் ஃபேமஸான மிருணாளினி ரவி நடிக்கிறார். மேலும், முக்கிய ரோலில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். இதனை வினோத் குமார் தயாரிக்கிறார். தமன் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறாராம். சமீபத்தில், இப்படத்தின் விஷால் மற்றும் ஆர்யாவின் செம்ம மாஸான கேரக்டர் போஸ்டர்ஸை ரிலீஸ் செய்தனர். இந்த கேரக்டர் போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

4.சிம்ரன் – அந்தகன் :

பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் ‘அந்தகன்’ திரைப்படத்தில் நடிகை சிம்ரன் பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டப்போகிறாராம். பாலிவுட்டில் ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்கான இப்படத்தை இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரட்ரிக் இயக்கி வருகிறார். இதில் முக்கிய ரோல்களில் கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் நடிக்கின்றனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

5.சாய் தன்ஷிகா – லாபம் :

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ‘லாபம்’ திரைப்படத்தில் நடிகை சாய் தன்ஷிகா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டப்போகிறாராம். இப்படத்தை இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்க, முக்கிய ரோல்களில் ஸ்ருதிஹாசன், கலையரசன், ஜெகபதி பாபு, ஜெய் வர்மன், நிதிஷ் வீரா, டேனியல் அன்னி போப், ப்ரித்வி ராஜன், ரமேஷ் திலக் நடித்து வருகின்றனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான் இசையமைத்து வருகிறார்.

6.தமன்னா – ‘அந்தாதூன்’ ரீமேக் :

நித்தின் ஹீரோவாக நடிக்கும் புதிய தெலுங்கு திரைப்படத்தில் நடிகை தமன்னா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டப்போகிறாராம். பாலிவுட்டில் ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்கான இப்படத்தை இயக்குநர் மெர்லபாக காந்தி இயக்கி வருகிறார். இதில் நித்தினுக்கு ஜோடியாக நபா நடேஷ் நடிக்கிறார். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான மஹதி ஸ்வரா சாகர் இசையமைத்து வருகிறார்.

Share.