‘ஜெயம்’ ரவியின் ‘பூமி’… வெளியானது ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவரது நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களும் (அடங்க மறு, கோமாளி) சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘ஜெயம்’ ரவியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

அடுத்ததாக ‘ஜெயம்’ ரவி நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, லக்ஷ்மனின் ‘பூமி’, அஹமத்தின் ‘ஜன கண மன’, மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ பார்ட் 2, இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த ஆண்டு (2020) டிசம்பர் 26-ஆம் தேதி ‘பூமி’ படக்குழுவினர் படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர்.

இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளாராம். தற்போது, படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். படத்தை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற OTT தளத்தில் நாளை (ஜனவரி 14-ஆம் தேதி) பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.