தனுஷை வைத்து இயக்கும் படம்… டைட்டில் குறித்து செல்வராகவன் போட்ட ட்வீட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன்’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், செல்வராகவன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் செல்வராகவன் – தனுஷ் காம்போவில் தயாராகும் படத்துக்கான படப்பிடிப்பு கடந்த ஜனவரி 5-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டைட்டிலை நாளை (ஜனவரி 13-ஆம் தேதி) இரவு 7:10 மணிக்கு அறிவிக்க ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை இப்படத்தின் இயக்குநர் செல்வராகவனே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து வருகிறாராம்.

Share.