ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த ‘பிக் பாஸ் 4’ சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

சினிமாவில் பாப்புலர் நடிகையாக இருப்பவர் சனம் ஷெட்டி. இவர் தமிழில் அறிமுகமான முதல் படமே ‘அம்புலி’. அதன் பிறகு சனம் ஷெட்டியின் கால்ஷீட் டைரியில் ‘கதம் கதம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, சதுரம் 2, வால்டர்’ என படங்கள் குவிந்தது.

இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். கடந்த ‘பிக் பாஸ்’ சீசன் 3-யில் கலந்து கொண்ட நடிகர் தர்ஷன் – சனம் ஷெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், சனம் ஷெட்டிக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி.

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. கடந்த மாதம் (டிசம்பர்) 6-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பரான புது ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இப்புது ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

Share.