‘பிக் பாஸ் 4’-யில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார்.

அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, அர்ச்சனா மற்றும் அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆஜித் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, ‘பிக் பாஸ்’ ஷோவில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

1.நடிகை சனம் ஷெட்டி – ரூ.1 லட்சம்

2.நடிகை ரேகா – ரூ.1 லட்சம்

3.செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் – ரூ.40 ஆயிரம்

4.நடிகை ஷிவானி நாராயணன் – ரூ.60 ஆயிரம்

5.நடிகை கேப்ரில்லா – ரூ.70 ஆயிரம்

6.விஜய் டிவி அறந்தாங்கி நிஷா – ரூ.40 ஆயிரம்

7.நடிகை ரம்யா பாண்டியன் – ரூ.75 ஆயிரம்

8.நடிகை சம்யுக்தா கார்த்திக் – ரூ.40 ஆயிரம்

9.தொகுப்பாளினி அர்ச்சனா – ரூ.75 ஆயிரம்

10.பாடகி சுசித்ரா – ரூ.80 ஆயிரம்

Share.