பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் மாஸ் காட்டப்போகும் ‘பிக் பாஸ் 4’ வின்னர் ஆரி!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரி தான் டைட்டில் வின்னரானார்.

இப்போது நடிகர் ஆரி நடிப்பில் ‘அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், பகவான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஆரி தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை இயக்குநர் அபின் என்பவர் இயக்க உள்ளார். இதில் ஆரி காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ஆரிக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்க உள்ளார். இன்று இந்த படத்துக்கான பூஜை போடப்பட்டதாம்.

Share.