அறிவழகன் இயக்கும் ‘பார்டர்’… சூப்பரான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அருண் விஜய்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் அருண் விஜய். இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘பாக்ஸர், சினம், வா டீல், அக்னிச் சிறகுகள்’ மற்றும் இயக்குநர்கள் அறிவழகன் – ஹரி படங்கள் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் அறிவழகன் இயக்கும் படத்துக்கு ‘பார்டர்’ என தலைப்பு வைத்திருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

தற்போது, இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது படக்குழு. இன்று இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

இதில் ஹீரோயினாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறாராம். இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 10-ஆம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். அருண் விஜய்யின் 31-வது படமான இதனை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.