அந்த ஹீரோயினிடம் கேட்காமல் என்னிடம் மட்டும் கேட்குறீங்க?… கொந்தளித்த நம்பர் நடிகை!

தமிழ் திரையுலகில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அந்த சின்ன நம்பர் நடிகை. ஆரம்பத்தில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த இவர் அடுத்தடுத்து கொடுத்த சில ஃப்ளாப் படங்களால் இவருக்கு பின்னால் வந்த பல நடிகைகள் அந்த இடத்துக்கு சென்று விட்டார்கள்.

இந்த சின்ன நம்பர் நடிகையும், பெரிய நம்பர் நடிகையும் ஒரு காலத்தில் ஃப்ரெண்ட்ஸாக இருந்தார்கள். இப்போதும் அந்த பெரிய நம்பர் நடிகை டாப் ஹீரோயின்களின் லிஸ்டில் இருந்து மாஸ் காட்டி வருகிறார். ஆகையால், இந்த சின்ன நம்பர் நடிகைக்கு அவர் மீது இருந்த பாசம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கோபமாக மாறி வருகிறது.

அதற்கு சான்றாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. சின்ன நம்பர் நடிகை நடிப்பில் நேற்று OTT-யில் ஒரு படம் ரிலீஸானது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அந்த நடிகை சொல்லியிருக்கிறார். இதனால் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் அந்த நடிகை மீது புகார் கொடுத்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர்.

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் பேசிய சின்ன நம்பர் நடிகை “பெரிய நம்பர் நடிகை அவர் நடிக்கும் எந்த படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. ஆனால், அவரை எதுவும் கேட்காமல் என்னிடம் மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் “பெரிய நம்பர் நடிகை agreement sign பண்ணும்போதே அதில் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி விடுகிறார்.

ஆனால், நீங்களோ agreement-யில் இரண்டு நாட்கள் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்று சொல்லியிருந்தீர்கள்” என்று கூறியிருக்கிறார். ஆனாலும், சின்ன நம்பர் நடிகை தான் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டார். இதனால் கடுப்பான தயாரிப்பாளர் சங்கம், சின்ன நம்பர் நடிகைக்கு ரெட் கார்டு கொடுத்து இனிமேல் படங்களில் நடிக்க தடை விதித்து விடலாம் என்று முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share.