இதுவரை யாரும் பார்த்திராத பாபி சிம்ஹாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பாபி சிம்ஹா. ஆரம்பத்தில் ‘காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, சூது கவ்வும், நேரம்’ போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்து தன் நடிப்பால் கவனம் ஈர்த்தார். அதன் பிறகு ‘ஜிகர்தண்டா’ படத்தில் ‘அசால்ட் சேது’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார் பாபி சிம்ஹா. ‘ஜிகர்தண்டா’ ஹிட்டிற்கு பிறகு நடிகர் பாபி சிம்ஹாவிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆடாம ஜெயிச்சோமடா, ஆ, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, மசாலா படம், உறுமீன், பெங்களூர் நாட்கள், கோ 2, இறைவி, மெட்ரோ, கவலை வேண்டாம், பாம்பு சட்டை, கருப்பன், திருட்டுப் பயலே 2, சாமி ஸ்கொயர், பேட்ட, அக்னி தேவி’ என படங்கள் குவிந்தது. பாபி சிம்ஹா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

2016-ஆம் ஆண்டு நடிகை ரேஷ்மி மேனனை பாபி சிம்ஹா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இப்போது பாபி சிம்ஹா நடிப்பில் ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று (நவம்பர் 6-ஆம் தேதி) நடிகர் பாபி சிம்ஹாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் பாபி சிம்ஹாவின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

Share.