“நான் தப்பா எதாவது கேட்டுட்டனா பிரதர்?”… ஆரி – ரியோ ராஜ் இடையே மோதல்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, அர்ச்சனா மற்றும் அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆஜித் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி நாராயணன் எலிமினேட் செய்யப்பட்டார். ஏற்கனவே எலிமினேட்டான சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீஎன்ட்ரியாகியுள்ளனர். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் கேப்ரில்லா “ஆரி ப்ரோ ஓகேவா உங்களுக்கு” என்று ஆரியிடம் கேட்கிறார். ஆரி பதில் எதுவும் சொல்லாமல் இருக்கிறார். பின், ரியோ ராஜ் ஆரியிடம் “அவதான் நாலு தடவை கேட்டுட்டால பிரதர். ஓகேவா இல்லையா? சொல்லுங்க பிரதர்” என்று சொல்கிறார். அதற்கு ஆரி ரியோவிடம் “ஓகேன்னு சொல்லிட்டேன் பிரதர். நீங்க பார்க்கலையா?” என்று கேட்கிறார்.

பின், ரியோ “sorry பிரதர். நான் தப்பா எதாவது கேட்டுட்டனா?” என்று கேட்கிறார். அதற்கு ஆரி “நீங்க கேட்ட sense வந்து நான் பதில் சொல்லாம அவளை இழுத்து அடிக்குற மாதிரி உங்க டோன்ல இருந்ததுனால நான் சொன்னேன் நான் கேபிகிட்ட பேசிட்டேன்னு” என்று சொல்கிறார். பின், ரியோ “தெரியல பிரதர். எந்த விதமான தப்பான எண்ணத்திலும் நான் சொல்லல. but நீங்க என்கிட்ட react பண்ணியிருக்க வேண்டாம். நான் இடையில் வந்தது தப்பு sorry brother” என்று சொல்கிறார். அதற்கு ஆரி “sorry பிரதர்” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.