“எந்த வகையிலும் பெண்கள் குறைவு கிடையாது”ன்னு சொன்ன பாலாஜி… ‘பிக் பாஸ் 4’ புது ப்ரோமோ!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, அர்ச்சனா மற்றும் அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஆஜித் எலிமினேட் செய்யப்பட்டார். நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி நாராயணன் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் ஆரி “டிக்கெட் to finale-ல வந்து யாரோ ஒருத்தருக்கு தான் அந்த டிக்கெட் கிடைக்கப்போகுது.

இந்த ஒரு வாரம் சரியா இருந்து, நான் டிக்கெட் to finale-க்குள்ள நான் போகணுமா? இல்ல 91 நாள் நான் சரியா இருந்ததுக்காக நான் டிக்கெட் to finale போகப்போறனா? அப்படின்னு ஒரு கேள்வி வந்துட்டே இருந்துச்சு. இந்த இடத்துல நான் 100% நேர்மையா இருக்கணும்னு நினைச்ச ஒரு moment-ஆ இருந்ததுக்கு எனக்கு கிடைச்ச ஒரு விஷயம்” என்று சொல்கிறார்.

அதன் பிறகு பாலாஜி முருகதாஸ் “இல்ல நான் கேமை கேமா தான் பார்த்தேன். அதை தாண்டி எதுவுமே பார்க்கல. 11 பேர் எனக்கு against-ஆ வாதாடும்போது ரொம்ப ஹேப்பியா இருந்தது. enjoy பண்ணேன் அந்த moment-அ. எந்த வகையிலும் பெண்கள் குறைவு கிடையாது. அந்த பாட்டு வரும்போது ஒரு ஆஸ்கார் win பண்ணி ஒரு speech கொடுக்கும்போது ஒரு feel இருக்கும்ல” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.