உதயநிதியின் ‘ஆர்டிகிள் 15’ ரீமேக்கில் இணைந்த 2 ‘பிக் பாஸ் 4’ பிரபலங்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘ஏஞ்சல், கண்ணை நம்பாதே’, ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் ‘ஆர்டிகிள் 15’ படத்தின் ரீமேக் ஷூட்டிங்கில் நடிகர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இதனை இயக்கி வருகிறார். ஹிந்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் தமிழ் வெர்ஷனுக்கு அதிக எக்ஸ்பெக்டேஷன் உள்ளது.

தற்போது, இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ‘பிக் பாஸ்’ சீசன் 4 வின்னர் ஆரியும், இன்னொரு போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தியும் நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் ‘குக் வித் கோமாளி’ மூலம் ஃபேமஸான ஷிவாங்கியும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மிக விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.